பன்னாட்டு நிதி மையம் (இரண்டு)
பன்னாட்டு நிதி மையம் (இரண்டு) என்பது ஹொங்கொங்கில் கட்டப்பட்ட ஒரு வானளாவி ஆகும். இதனைச் சுருக்கமாக "ifc" என்று அழைக்கிறார்கள். அத்துடன் இந்த வானளாவியின் சின்னமாகவும் ifc எனும் ஆங்கில சிறிய எழுத்துக்களையே கொண்டுள்ளது. இந்த வானளாவி ஹொங்கொங் தீவில், சென்ட்ரல் மாவட்டத்தில், சென்ட்ரல் நகரில் கடல் முகப்பில் அமைந்துள்ளது. இந்த வானளாவி, 2010 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பன்னாட்டு வர்த்தக மையம் (கட்டடம்) கட்டப்படும் வரை, இதுவே ஹொங்கொங்கில் உள்ள உயரமான வானளாவியாக இருந்தது. தற்போது இது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. அத்துடன் உலகில் வானளாவிகளின் வரிசையில் 12 வது உயரமான வானளாவியாக இது உள்ளது.
Read article